நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கி போராடும் சாளம்பைகுள கிராம மக்கள்.


வவுனியா மன்னார் வீதியில் உள்ள புதிய சாளம்பைகுள கிராம மக்கள் மாபெரும் கவனயீப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.


வவுனியா நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள்,வைத்திய சாலை கழிவுகள் உட்பட மனித வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய காலாவதியான மருந்து பொருட்களை வவுனியா நகர சபைக்கு சொந்தமான கனரக வாகனங்கள் மூலமாக சேகரித்து புதிய சாளம்பைகுளம் கிராமம் அருகில் இருக்கும் பம்பை மடு என்ற இடத்தில் சுகாதாரம் அற்ற முறையில் கொட்டுவதால் இந்த மக்கள் பெரும் அசோகரிகங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனூடாக வெளிவரும் நச்சுப்புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டு பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இவ் கிராமம் அருகில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகம் அமைந்துள்ளதுடன் இலங்கை ராணுவ பயிற்சி முகாம் ஒன்றும் அமைந்துள்ளது.

இதனால் இங்கு கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் படையினர்களும் நோய்வாய்ப்பட்டு அண்மையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர். 
ஆகவே இதனை அகற்றும் படி பல மனுக்கள் அரசாங்க செயலகத்திற்கு வழங்கியும் இது வரை காலமும் அவர்கள் நிரந்தர தீர்வு வழங்காமல் காலம் கடத்தி வருகின்றனர். 
ஆகவே இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.