இவ்வார அமைச்சரவையில் முக்கிய பத்திரம் தாக்கல்!
9 மாகாண சபைகளில் ஏற்கனவே 6 மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், ஏனைய மூன்று மாகாண சபைகளையும் கலைக்கும் வகையில் ஜனாதிபதி இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், ஜனாதிபதி மைத்திரி கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரேயடியாக நடத்தும் வகையில் ஜனாதிபதி இத்திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்சிக்காலம் நிறைவடைந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமை தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியாக எதிரப்புகளையும் விமர்சனங்களையும் சம்பாதித்து வருகின்றமை குறிப்பிடத்ததக்கது.

Post a Comment