உலக வங்கியின் பிரதிநிதிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் கலந்துரையாடல்
வாஷிங்டன் நகரிலிருந்து திரு. டகுயா கமாடா தலைமையில் இலங்கை வந்துள்ள உலக வங்கியின் பிரதிநிதிகள், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை நேற்று (29) மாலை அவரது இல்லத்தில் சந்தித்து, இங்கு உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் நீர் மற்றும் துப்புரவு ஏற்பாடுகள் செயற் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடினர். இதில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே உட்பட உயர் அதிகாரிகளும், உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் இருவரும் பங்குபற்றினர்.

Post a Comment