வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை!


வடக்கு, கிழக்கு மகாணங்களில் மீள்குடியேற்றப் பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பிலான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலேயே இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.