உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு


உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும் புதிதாக இன்று (09) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 


புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரீதி பத்மன் சூரசேன மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர் அமரசேகர ஆகியோர் பதவியேற்றுள்ளதுடன், புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பீ பெர்ணான்டோ பதவியேற்றுள்ளார். 



இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் கலந்துகொண்டிருந்தார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.