ஹனிபா மதனி வெளியிட்டுள்ள அறிக்கை.!!!

ஞானசார தேரர் விடுதலை , தமிழ் கைதிகள் விடுதலை ,மற்றும் நுரைச்சோலை வீடமைப்பு திட்ட இழுபறி தொடர்பில் ஐனாதிபதிக்கு நான் எழுதிய கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது

ஐனாதிபதிக்கு இந்த கடிதம் எழுதப்பட்டதன் நோக்கம் மறைக்கப்பட்டு, அதனை அரை குறையாக வாசித்து என்னையும் எனது குடும்பத்தினரையும் பிறந்த மண்ணையும் நான் கற்ற கல்விக்கூடங்களையும் அரசியலில் நான் சார்ந்த கட்சியையும் இழிவுபடுத்துவதற்காக இதனை ஒரு துரும்பாக கையில் எடுத்து மனச்சாட்சிக்கு விரோதமாக சிலர் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். மிகவும் மோசமான வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்துகின்றனர்
நான் பெற்ற கல்வியும் சமூக, சமயப்பணிகளில் எனக்குள்ள ஆழ்ந்த ஈடுபாடும் சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தைரியமுமே இக் கடிதத்தை இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூக நலன் கருதி எழுதத்தூண்டியது
முஸ்லிம் காங்கிரஸ் வழியாக அரசியலில் உள் நுழைந்த நான், கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன்.
இந்த கடிதத்தை வைத்து, எனது குடும்பத்தையோ அகில இலங்கை மக்கள் காங்கிரசையோ தொடர்பில்லாமல் விமர்சிப்பதை தவிர்க்குமாறு அன்பாக வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.