ஈரானியப் புரட்சியின் 40 ஆண்டு நினைவு நிகழ்வுகள்: மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்பு

ஈரானில் 1979 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஈரானியப் புரட்சியின் 40 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகள் ஈரானில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் முழுவதும் இதற்கான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடாத்தப்படுவதாகவும் இதில் பல மில்லியன் மக்கள் கலந்துகொள்வதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் காரணமாக தாம் இன்னும் பலமாக காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் அரசாங்கம் விதித்துள்ள பொருளாதார தடை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ஈரான் அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வுகள் தெஹ்ரான் நகரில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வுகளுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
உலகின் 18 ஆவது பெரிய நாடாக விளங்கும் ஈரான், 78.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது. ஈரானின் அமைவிடம் ஆசியாவின் மேற்கு, நடு, தெற்கு ஆகிய பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதனால், இந்நாட்டுக்குக் குறிப்பான ஒரு புவியியல்சார் அரசியல் முக்கியத்துவம் உண்டு.
ஈரானின் வடக்கு எல்லையில், ஆர்மேனியா, அசர்பைசான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. ஈரான் உள்நாட்டுக் கடலான கசுப்பியன் கடலோரமாக அமைந்திருப்பதால், கசாக்சுத்தான், உருசியா என்பனவும் இதற்கு நேரடி அயல் நாடுகளாக இருக்கின்றன. ஈரானின் கிழக்கு எல்லையில் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் என்பனவும், தெற்கில் பாரசீகக் கடல், ஒமான் வளைகுடா என்பனவும், மேற்கில் இராக்கும், வடமேற்கில் துருக்கியும் அமைந்துள்ளன.
தலைநகரான தெஹ்ரான் நாட்டின் மிகப் பெரிய நகரமாக உள்ளதுடன், நாட்டின் அரசியல், பண்பாட்டு, வணிக மற்றும் கைத்தொழில் மையமாகவும் விளங்குகிறது. ஈரான் ஒரு பிரதேச வல்லரசாக இருப்பதுடன், பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவற்றின் பெருமளவு இருப்புக் காரணமாக அனைத்துலக ஆற்றல் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் முக்கியமான இடத்தையும் வகிக்கிறது
உலகின் இரண்டாவது பெரிய உறுதிசெய்யப்பட்ட இயற்கைவாயு இருப்பும், நான்காவது பெரிய பெட்ரோலிய இருப்பும் ஈரானிலேயே உள்ளன.
ஈரான் ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாவுக்கு முரணான ஷீஆ பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.