மன்னார் சாலையில் பணியாற்றும் 66 பணியாளர்களுக்கு இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையினால் பதவி உயர்வு வழங்கி வைப்பு-PHOTOS)
வட பிராந்திய போக்குவரத்து சபையின் மன்னார் சாலையில் பணியாற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான 'ஜாதிக்க சேவை' சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மாலை அவர்களின் பணிகளில் பதவி உயர்வு பெற்றனர்.
சாரதிகள் நடத்துனர்கள் அலுவலக உதவியாளர்கள் இயந்திரப் பொறியியல் பகுதியில் பணியாற்றும் தொழில் நுட்பவியலாலர்கள் எழுது விளைஞசர்கள் மற்றும் சாலை பரிசோதகர்கள் என சுமார் 66 பணியாளர்கள் இவ்விதம் இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையினால் பதவி உயர்வு வழங்கப்பட்டனர்.
முன்னொருபோதும் இல்லாத வகையில் மன்னார் போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் ஓரே சமயத்தில் பதவி உயர்வுக்கு உட்படுத்தப்பட்டது இதுவே முதல் சம்பவமாகும்.
மேலும் பதவி உயர்வு பெற்றவர்களில் ஒரு சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எனும் ஓரே காரணத்தினால் கடந்த 20 வருடங்களாக எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படாது அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த வகையில் மன்னார் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ஏ.சமியூ முகம்மது பஸ்மியின் அனுசரனையில் மன்னார் டீப்போவின் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் வை. விஜிந்தன் மற்றும் செயலாளர் என்.எம் நஜுமூதின் மற்றும் பொருளாளர் எஸ்.பீட்டர் ஆகியோரின் அயராத தொடர் முயற்சியின் காரணமாக மேற்படி பதவி உயர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த பதவி உயர்வுக்கான கடிதங்கள் மன்னார் போக்குவரத்துச் சபை டீப்போவில் நடைபெற்ற வைபவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ஏ.சமியூ முகம்மது பஸ்மியினால் ஊழியர்களுக்கு வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Post a Comment