வவுனியா நகர் தனியார் கல்வி நிலையங்களுக்கு நகரபிதாவின் முக்கிய அறிவிப்பு!
வவுனியா நகரசபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் முக்கிய அறிவித்தல் 03.02.2019 ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சகல தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளை நிறுத்துதல் வவுனியாவின் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வரும் 03.02.2019 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதலாவது “மகாவித்தியன்” நிகழ்வை நடாத்த உள்ளதால்,பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த நாளில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி, மாணவர்களை குறித்த நிகழ்வில் பங்குபற்ற நடவடிக்கை எடுத்துதவுமாறு வவுனியா நகரசபையின் நகரபிதா இராசலிங்கம் கௌதமன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் குறித்த வரலாற்று சிறப்பு மிக்கதான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முதலாவது “மகாவித்தியன்” நிகழ்வு சிறப்பாக நடைபெற தனது முழுமையான ஆதரவை வழங்குவதோடு, தனது வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்வதாக கௌரவ தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment