போலி ஆவணங்களை கொண்டு சிம் விற்பனை செய்த மூவர் கைது!!!




- எஸ்.கௌசல்யா-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகள், நகர் , மற்றும் கிராம பிரதேசங்களில் டயலொக் கம்பணி ஊழியர்கள் என தம்மை அடையாளம் படுத்திக்கொண்டு பொது மக்களை ஏமாற்றி பணம் வசூலித்து வந்த மூவருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் தலா ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வீதம் ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நுவரெலியா மாவட்ட பொலிஸ் நீதிமன்ற நீதவான் பிரமோத ஜெயசேகர (14) வியாழக்கிழமை மாலை பிரப்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தில், கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் , கண்டி தம்பேவில பிரதேசத்தை சேர்ந்த ஆண்கள் இருவருக்குமே பிணையில் செல்ல நீதவான் உத்தரவு பிரப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
டயலொக் கம்பணியின் ஊழியர்கள் என அடையாளம் படுத்தி கொண்ட பெண் ஒருவர் மற்றும் ஆண்கள் இருவர் கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கொண்டு நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் 22 மற்றும் 25 வயதுக்கு உட்டப்பவர்கள்.
இவர்கள் கையடக்க தொலை பேசிக்கான 4ஜீ சிம் அட்டைகள் மற்றும் விண்ணப்பபடிவங்கள் ஒரு தொகையுடன் கடந்த இரு தினங்களாக நுவரெலிய, நானுஒயா பின் லிந்துலை ஆகிய பகுதிகளில் தனது விற்பணை நடவடிக்கையில் ஈடூப்பட்டுள்ளனர்.
மக்கள் பெறும் சிம் காடுகளுக்கு ரீசார்ச் செய்து தருவதாக கூறி பணம் வசூலித்தும் வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை (13) மாலை லிந்துலை நகரில் இவர்கள் மேற் கொண்டு வந்துள்ள நடவடிக்கையில் சந்தேகம் நிலவியுள்ளதை பொதுமக்கள் லிந்துலை பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 24 (4ஜீ) சிம் அட்டைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் பலவும் அவர்கள் வாடகைக்கு அமர்த்தியிருந்த கார் ஆகியவற்றை பொலிசார் கைப்பற்றியதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.பி.பி.பண்டார தெரிவித்தார்.
இவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளையில் இவர்கள் தொடர்பில் டயலொக் கம்ப்பணியில் விசாரணை நடத்தியதில் இவர்கள் டயலொக் கம்பணி ஊழியர்கள் இல்லை எனவும், இவர்கள் போலியானவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் லிந்துலை பகுதிக்கு சிம் அட்டை விணியோக சேவைக்கு ஊழியர்கள் அனுப்பவில்லை என்றும் டயலொக் கம்பணி அதிகாரிகள் தெரிவித்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
சிம் அட்டைகள் விணியோகித்தும், புதிய பெகேஜிகளை பெற்று தருவதாகவும் கூறியே பணம் வசூலித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் (14) மாலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது.
இதன் போது சந்தேக நபர்கள் ஒருவருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் மூவரையும் ஆறு லட்சம் ரூபாய் சரீர பினையில் செல்ல உத்தவிட்ட நீதவான் பிரமோத ஜெயசேகர எதிர்வரும் ஏப்ரல் மாதம் ( 02.04.2019) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.