பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த தென்னிலங்கை அரசியல்வாதி!கிருஷாந்த புஷ்பகுமார கைது! பின்னர் நடந்த அதிரடி சம்பவம்!
இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தென்னிலங்கை அரசியல்வாதி தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினர் கிருஷாந்த புஸ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26-02-2019 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புஸ்பகுமார, அக்மீமன பொலிஸில் சரணடைந்தார்.
சந்தேகநபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment