தூபி மீதேறிய அரபுக் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது!!!
மிஹிந்தலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தூபியின் மீது ஏறிய, நிட்டம்புவ – திஹாரிய பகுதியிலுள்ள அரபுக் கல்லூரி மாணவர்கள் இருவர் இன்று (14) மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியாவை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய மாணவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தனர்.

Post a Comment