இராஜாங்க அமைச்சர் ஹாரீஸ் என்னை கொலைக்களத்தில் இறக்கி ஏமாற்றினார்! சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்களையும் சாட்டையால் அடிக்கிறார் ஏ.ஸி. யஹியாகான்!


1.இராஜாங்க அமைச்சர் ஹரீஸுடன்  
சிராஸ் மீராசாகிப்   பேச முடியுமென்றால்
நான் ஏன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் 
பேசக் கூடாது?

2. சாய்ந்தமருது அபிவிருத்தி தொடர்பில் எம்முடனே பேச வேண்டுமே தவிர சுயேட்சைக் குழு உறுப்பினர்களுடன் (தோடம்பழம்) பேசக் கூடாது.

3.எனக்கும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்குமிடையில் இனிமேல் எவ்விதத் தொடர்பும் இல்லை. கட்சியின் தலைமையுடேனேயே இனிப் பயணிப்பேன்.

4.சாய்ந்தமருது பள்ளி நிர்வாகத்தையும்  தோடம்பழ உறுப்பினர்களையும் சந்திக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர்  ஹரீஸ் அடம்பிடிப்பதற்கான காரணம் என்ன? 

5.எனக்கு அமைச்சில் வெறும் பதவியை தந்தாரே தவிர, அதிகாரங்களைத் தரவில்லை.

உள்ளூராட்சி, மாகாண சபைகள்  இராஜாங்க அமைச்சர் கௌரவ  ஹாரீஸ் அவர்கள் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  உயர்பீட உறுப்பினரும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொருளாருமான யஹியாகான் அவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதனை அவரது குரலில் அவரின் முழுமையான அனுமதியில் பதிவிடுகிறேன்.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.