கொக்கிளாய் களப்பினூடாக பாலம், மாற்றுவீதியை அமைக்க அமைச்சரவை அனுமதி.
முல்லைதீவு – கொக்கிளாய் – புல்மோட்டை வீதியின் கொக்கிளாய் களப்பினூடாக பாலம் மற்றும் அதன் மாற்று வீதியை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பிலான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
கிழக்கு மற்றும் வட மாகாணத்திற்கிடையில் கரையோரத்தில் தரையுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக முல்லைத்தீவு – கொக்கிளாய் – புல்மோட்டை வீதியை அபிவிருத்தி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொக்கிளாய் களப்பினூடாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்தப் பாலத்தின் மூலம் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டைக்கிடையில் சுமார் 100 கிலோமீற்றர் தூரம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment