சிலாவத்துறையில் காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தியது முசலிப்பிரதேசபை!!!


முசலிப்பிரதேசபைக்குட்பட்ட சிலாவத்துறையில் காணி அபகரிப்பு நடவடிக்கையை முசலிப்பிரதேசபை தலையிட்டு தடுத்துநிறுத்தியுள்ளது..

வன்னிமாவட்ட சுதந்திர கட்சியின் முக்கியஸ்தரும் பிரதேச செயலக உயர் அதிகாரிகளின் உதவியுடன் இந்த காணியை சுவீகரிக்க சிலவத்துறையை சேர்ந்த தனி நபர் முயற்சியை மேற்கொண்டபோது இதை அறிந்த பிரதேசபை தவிசாளர்,  உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் விரைவாக செயற்பட்டு இந்த காணி அபகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்....

இது தொடர்பாக தவிசாளர் கூறியதாவது. 

இந்த காணி தனியார் உரிமை கொண்டாட முடியாது இதில் இந்த பிரதேசத்திற்கான சந்தையை இந்த இடத்தில் ஆரம்பிக்க உள்ளோம்  விரைவில் சந்தைக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாகவும் 
பிரதேச செயலக அதிகாரிகள் மக்களுக்கான முக்கியமான விடயத்தில் தமது நேர காலத்தை செலவிடுங்கள் இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளுக்கு உதவ வேண்டாம் என்றும் தவிசாளர் தெரிவித்தார்...




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.