அநுராதபுர மாவட்ட சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி தலைமையில்…



இலங்கையில் சுற்றாடல் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் மாநாடுகளில் மற்றுமொரு நடவடிக்கையாக அநுராதபுர மாவட்ட விசேட சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (14) முற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
அநுராதபுர மாவட்டத்தின் சுற்றாடல் அறிக்கையை மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.
சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதி அவர்களினால் மரக்கன்று ஒன்று நடப்பட்டதுடன், சூழல் நேயமிக்க இரண்டு பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக பழக் கன்றுகளையும் வழங்கி வைத்தார்.
அமைச்சர்களான பீ.ஹரிசன், சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு துறை பிரதானிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.