இலங்கையில் பாடசாலை மாணவிக்கு (15) ஆசிரியர் செய்த கொடூரம் – அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!
பாடசாலை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி!15 வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் ஒருவர் இன்று (18-03-2019) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் (15) பதினைந்து வயது மாணவியை குறித்த ஆசிரியர் பாலியல் வல்லுறவிற்குற்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை அம்மாணவி தனது தாயிடம் மாணவி முறையிட்டுள்ளார். தாய் மாணவியுடன் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
காவல் துறையின் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment