படுகொலை செய்யப்பட்ட ரத்கம வியாபாரிகள் இருவரினதும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு….
படுகொலை செய்யப்பட்ட ரத்கம வியாபாரிகள் இருவரினதும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு….
கொலை செய்யப்பட்ட ரத்கம வியாபாரிகள் இருவரினதும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நிதி அன்பளிப்பை வழங்கினார்.
தமது பிள்ளைகளுடன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த அவ்வியாபாரிகளின் மனைவிமார் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர். அவர்களின் விபரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அக்குடும்பங்களின் முன்னேற்றத்திற்காகவும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காகவும் இந்த நிதி அன்பளிப்பை வழங்கினார்.

Post a Comment