கடன் தவனைக்குப் பதிலாக உகாண்டாவின் பிரதான சொத்துக்கள் சீனா வசம்!!!

உகாண்டா அரசு சீனாவிடம் வாங்கிய கடன் தொகைகளை மீள செலுத்த முடியாத நிலையில் நாட்டின் பிரதானமான உள்நாட்டு சொத்துக்களை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டிய அபாய நிலையை எதிர்நோக்குயுள்ளது.
எனினும் குறித்த வளர்ந்து வரும் கடன் தவனைகள் நிலையானதென்றும் அதன் மூலம் நாட்டின் நிதிச் சொத்துக்கள் சீனாவிடம் தாரைவார்க்ப்படமாட்டா என உகாண்டாவின் நிதியமைச்சர் Matia Kasaija குறிப்பிட்டுள்ளார்.
African Stand எனும் செய்தி நிறுவனமானது கடந்த வருடம் டிஸம்பர் மாதம் கென்ய அரசு அதிகரித்த கடன் தொகை காரணமாக அதன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த "மொம்பாஸா" துறைமுகத்தை சீனாவிட ஒப்படைக்க நேரிடும் என தெரிவித்திருந்தது.
ஆபிரிக்க ஊடகங்கள் சீன அரசை பாதாளஉலக உறுப்பினர்களுக்கு ஒப்பிட்டுள்ளன. சீன அரசு ஆபிரிக்காவில் உள்ள கனிம சுரங்கங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதிகரித்த சீன ஊழியர்களை ஈடுபடுத்தி சூழலை மாசடைய செய்வதாகவும், தங்கம், வௌ்ளி, செப்பு, வைரம் போன்றவற்றை சூரையாடுவதாகவும் தெரிவிக்கின்றன.
சோமாலியாவில் உள் நாட்டு மீனவர்கள் பாரிய மீன் பிடி கப்பல்களுடன் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. காரணம் சோமாலிய அரசு பெற்ற கடன் தொகைகளுக்கு பகரமாக 31 மீன் பிடி அனுமதிப்பத்திரங்களை சீன அரசுக்கு வழங்கியுள்ளது.
உகாண்டாவின் கணக்காய்வாளர் நாயகம் இந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூன் 2017 முதல் 2018 வரை அரசு பெற்றுக் கொண்ட பொதுக் கடன் தொகையானது 9.1 பில்லியன் டாலர்களிலிருந்து 11.1 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருப்பதாக எச்சரித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் - சீனாவின் பெயரை குறிப்பிடாமல் - உகாண்டா பெற்றுள்ள பாரிய கடன்களில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் உகாண்டாவின் இறையாண்மை மற்றும் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கணக்காய்வாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.