கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் அனுப்பிய கடிதத்தில் எழுத்துப்பிழைகள் (ஆபாச வார்த்தைகள்)

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரினால் ஒப்பமிடப்பட்டு வடக்கு மாகாணங்களிலுள்ள சகல வலய கல்விப்பணிமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் பல்வேறு எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 05.03.2019 செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் வடக்கு ஆளுநரினால் வழங்கப்பட்ட விடுமுறை தினத்தை எதிர்வரும் சனிக்கிழமை பதில் பாடசாலை நடாத்தவதற்கு கல்வி வலயப்பணிமனைகளுக்கு நேற்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அ.சாந்தசீலன் ஒப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
மாணவர்களையும், ஆசிரியர்களையும் வழிநடாத்தும் கல்விப்பணிமனைகளுக்கு கல்வி அமைச்சின் உதவிச் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலே இவ்வாறான எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன என்றால் கல்வி அமைச்சின் நிர்வாகத்தில் எவ்வாறான பிழைகள், தவறுகள் இடம்பெகின்றன என்பதை இலகுவாக கிரகித்துக்கொள்ள முடிகின்றன என்றும் கல்வியலாளர்கள் கருதுகின்றனர்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.