பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை“ ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்…
பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் புதிய கேட்போர்கூடம் மற்றும் உள்ளக விளையாட்டரங்குடன் கூடிய “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை“ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (25) பிற்பகல் பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இடம்பெற்றது.
பொலன்னறுவை ரோயல் கல்லூரி, லைசியம் சர்வதேச பாடசாலை மற்றும் கடவத்த மஹமாயா வித்தியாலயத்தின் மாணவ, மாணவிகளால் முன்வைக்கப்பட்ட வண்ணமயமான கலையம்சங்கங்களினால் விழா அலங்கரிக்கப்பட்டது.











Post a Comment