ஒரு செல்பி புகைப்படத்தால் வந்த சோதனை, தேடி பிடித்து பொலிஸாா் சாதனை..
வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பிரதேசத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா பயிர்செய்கை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த செல்ஃபி ஒளிப்படம் ஊடாக மேற்கொண்ட விசாரணைகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கஞ்சா பயிர்செய்கை சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் மிகவும் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டதாகவும் செடிகள் ஒவ்வொன்றும் 8 அடி உயரத்தில் உள்ளதுடன் மொத்தமான 115 கஞ்சா செடிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் பெறுமதி 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என வெல்லவாய பொலிஸார் தெரிவிக்கின்ற நிலையில் இதனை பயிரிட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Post a Comment