அதிக வெப்பத்தால் அவதியுறும் மன்னார் மக்கள்!!!




கடந்த ஒரு மாத காலமாக வடக்கு கிழக்கு உட்பட இலங்கை முழுவதிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது அதிலும் குறிப்பாக வறட்சி கூடிய மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மிக அதிகளவிலான வெப்பம் உணரப்படுகின்றது.


மதியம் 12 மணிதொடக்கம் 2.30 மணிவரையான நேரப்பகுதியில் அதிக அளவான வெப்பம் மற்றும் வெப்ப காற்று வீசுவதனால் மக்கள் பெரும்பாளும் வீடுகளுக்குலே அடங்கி காணப்படுகின்றனர்.
கூலித்தொழில் ஈடுபடும் மக்கள் இந்த வெப்ப காலநிலையில் தமது அன்றாட தொழிலுக்கு செல்லமுடியாமல் மிகவும் கஷ்ட்டப்படுகின்றனர் 

மன்னார் மாந்தை நானாட்டான் முசலி மடு ஆகிய ஐந்து பிரதேச செயலகர் பிரிவுகளிலும் தொடர்ச்சியாக அதிக வெப்பம் காணப்படுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பொது அமைப்புக்களால் கோரப்பட்டுள்ளது. அத்துடன் நீர் ஓடைகள் குளங்கள் கால்வாய்கள் அதீத வெப்பம் காரணமாக வற்றிய நிலையில் காணப்படுவதனால் கால் நடைகள் பெரிது பாதிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.