வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்!!!

வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில்  உரையாற்றிய போது,  மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி  இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன்நாட்டுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலமே அதிக அன்னியச் செலாவணி கிடைக்கப்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் பணிப்புரியும் அதிகமானவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் முகம்கொடுத்து வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்

இருப்பினும் தற்போது சவுதிகுவைட் போன்ற நாடுகளில் அந்த பிரச்சினை குறைந்துள்ளதோடு அந்த நாடுகளில் இருக்கும் எமது நாட்டுதூதுவர்கள் சிறப்பாக செயற்படுவதே இதற்கான காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.