வடகிழக்கில் நாளை கடையடைப்பு தமிழ் முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு !!!
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் மற்றும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பேரணிக்கு தமிழ் – முஸ்லிம் மக்கள், அமைப்புகள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள அரசசார்பற்ற ஒன்றியங்களின் அமையமாக இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்கள், பள்ளிவாயல்களின் ஒன்றியங்கள் என்பனவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ள நிலையில் அவர்கள் தமது போராட்டத்திற்கான முழுமையான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
Post a Comment