மன்னார் மாவட்ட சர்வமத பேரவையில் இருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேறு கின்றனர்.
மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் அறிவிப்பு. மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு கிறிஸ்தவ மக்களால் பிடுங்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் சைவத்தமிழ் மக்களுக்கு தாங்கொணா கவலையை ஏற்படுத்தியுள்ளது. முழுமுதற்கடவுள் சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றது எம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையில் இருந்து செயல்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்துக்குருமார் பேரவை இந்துக் குருமார்கள் வெளியேறிக் கொள்ளுகின்றோம். இது தொடர்பாக இந்துக்குருமார் பேரவை அவசர தொடர்பாடலின் மூலம் இம் முடிவு எடுக்கப்பட்டது.
Vavai Sharma
மன்னார் மாவட்ட சர்வமத பேரவை

Post a Comment