வட மாகாண இ.போ.ச ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள்!!!

டக்கில் 10வருடங்களுக்கு மேற்பட்ட இ.போ.ச. ஊழியர்களுக்கு பதவியுயர்வுகளை இவ்வருடத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அது தொடர்பில் பிரச்சினைகள் அல்லது எவருக்கும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் எழுத்து மூலம் அறியத் தருமாறு அவர் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவைக் கேட்டுக் கொண்டார். 
அதற்கிணங்க அதற்கான பட்டியலை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்போவதாக டக்ளஸ் தேவானந்தா எம்.பி. சபையில் தெரிவித்தார். 
பாராளுமன்றத்தில் நேற்று 27/2ன் கீழ் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கேள்வியெழுப்பினார்.  அவர் தமது கேள்வியின் போது வடக்கில் போக்குவரத்துத் துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், முரண்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். 
இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க,  வடக்கில் நிலவும் பஸ்கள் பற்றாக்குறை இவ்வருடத்தில் நிவர்த்திக்கப்படும். சாரதிகளுக்கான வெற்றிடங்கள் மற்றும் பதவி உயர்வுகளை நிரப்ப கவனம் செலுத்தப்படும். சாரதிகள் நியமனம் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படவுள்ளதாகவும் வெற்றிடங்களை நிரப்புவதில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.