சிலாவத்துறை : கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு போராட்டம் முன்னெடுப்பு.
மன்னார், சிலாவத்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி, 22 ஆவது நாளாகவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்படையினர் வசமுள்ள தங்களின் காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி, கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
யுத்தத்தின்போது, முசலி பகுதியில் இருந்து வௌியேறிய பாதிக்கப்பட்ட மக்கள், மீள குடியேறும் நோக்கில் அங்குள்ள தங்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
218 குடும்பங்கள் தங்களின் சொந்த காணிகளில் மீளக் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி காணி விடுவிப்பு போராட்டத்தை ஆரம்பித்த முதல் நாளே, முசலி பிரதேச செயலாளரிடம் மஹஜர் ஒன்றைக் கையளித்திருந்த போதிலும், இதுவரை பிரதேச செயலாளரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment