ஏமாற்றும் ‘பட்ஜட்’! – சாடுகின்றார் மஹிந்த!!!
நிதி அமைச்சரும் அரசும் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளைக் கொண்டு ஆட்சியை நடத்த முயற்சி செய்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கடந்த முறையைப் போலவே 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் அதிக வரிச்சுமை காணப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.‘பட்ஜட்’ தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்த மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த வரவு – செலவுத் திட்டத்தின் மூலமாக நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுக்கவோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவோ முடியாது.
இந்த வரவு-செலவுத் திட்டம் நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வேலைத்திட்டமாக அமைந்துள்ளது.
நிதி அமைச்சரும் அரசும் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளைக் கொண்டு ஆட்சியை நடத்தவே முயற்சித்து வருகின்றனர்” – என்றார்.

Post a Comment