முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக அப்துல்கபார் !

முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக எ.டபிள்யு.அப்துல் கபார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் (12) செவ்வாய்க்கிழமை கடமையைப் பொறுப்பேற்றார்.
கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையங்களின் பிரதான பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியாக நீண்டகாலம் சேவையாற்றிய அப்துல்கபார் மக்களின் உச்சக்கட்ட நன்மதிப்பைப் பெற்றிருந்தவர்.சிறந்த விளையாட்டுவீரனான அவர் மக்களுடன் இனமதபேதமற்று சிறப்பாக பழகுபவர்.
நீண்டகாலமாக பிரதான பொலிஸ் பரிசோதகராகவிருந்த அப்துல்கபார் கடந்த 21.02.2019 இல் உதவிப்பொலிஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வுபெற்றார்.
பயிற்சியின் பின்னர் கம்பஹா மற்றும் கொழும்ப கோட்டை பொலிஸ்நிலையத்தின் பிரதான பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றினார். இந்நிலையில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். மாவட்டமொன்றிற்கு பொறுப்பாக அவர் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர் இடமாற்றலாகிச்சென்றவேளை இனமதபேதம் பாராது பல அமைப்புகள் அவருக்குப் பொன்னாடைபோர்த்துப்பாராட்டி வழியனுப்பிவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.