வவுனியாவில் , சூரிய மின்கலத்தொகுதி திறந்து வைப்பு- அமைசர்களான ரிஷாத், ரவி பங்கேற்பு!!!
வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனும் கலந்து கொண்டு சூரிய மின்கலத் தொகுதியின் கட்டிடத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் முத்துமுகமது , உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.







Post a Comment