கரவெட்டி பிரதேசசபை தவிசாளரின்”டீசல்”களவும்..!! ஆசிரியருடன் கள்ள தொடர்பும் .!! தொடரும் கூட்டமைப்பின் ஊழல்கள்!

அந்த வகையில் ஏற்கனவே இவர்கள் ஸ்ரீலங்கா இனஅழிப்பு இராணுவத்தை பயன்படுத்தி தமது பிரதேச அபிவிருத்தி பணிகளை மேற்கொள்கிறோம் என்ற போர்வையில் இராணுவத்தை மக்கள் மயப்படுத்தும் ஒரு செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சபையின் அனுமதி பெறாமல் அப்பிரதேச கூட்டுறவுச்சங்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட டீசலினை பெற்றிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து பணம் கொடுப்பதை இழுத்தடித்துக்கொண்டிருந்ததால் கூட்டுறவுச்சங்கத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்யும் முடிவை எடுத்ததனால் எங்கே தனது குட்டு வெளிப்பட்டுவிடும் என்று பயந்த தவிசாளர் தனது சொந்தப்பணத்தில் அந்த பணத்தினை செலுத்தி பிரச்சனையை தீர்த்திருந்தமை தொடர்பில் நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் மீண்டும் மீண்டும் இவர்களின் தில்லுமுல்லுகள் தொடர்வதாக எமக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த வகையில்
கரவெட்டி பிரதேசசபை மண்டபம் வாடகை அறவிடப்படாமல் ஒரு பாடசாலை நிகழ்வுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பாடசாலையானது தவிசாளர் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வட்டாரத்திலுள்ள வசதியான பாடசாலையாகும். அப்பாடசாலையிலேயே தவிசாளரின் பிள்ளையும் கல்விகற்றுள்ளாதுடன் இப்படசாலை ஆசிரியரியர் (புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள ஆசிரியை) ஆசிரியையுடன் கள்ள தொடர்பிணை வைத்திருப்பதுடன் இந்த விடயம் வேறு உறுப்பினர்களால் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டவுடன் அதற்காக பிரதேசசபைக்கு ரூபா ஐந்தாயிரம் செலுத்தப்பட்டுள்ளது. (ஒரு நிகழ்வுக்கு ரூபா பத்தாயிரம் பெறுவது என சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது) அதன் பின்னரும் தவிசாளர் திருந்தவில்லை. கடந்த 21.02.2019 வியாழக்கிழமை அன்று உடுப்பிட்டி பகுதியில் குப்பை ஏற்றவேண்டிய பிரதேசசபை குப்பை வாகனம் அதே பாடசாலையில் காலை 8.00 மணியளவில் கட்டிட இடிபாடுகளை ஏற்றியுள்ளது. இதனை அவதானித்த ஒரு பிரதேசசபை உறுப்பினர் குறித்த வாகன சாரதியிடம் யார் உங்களை குப்பை ஏற்றாமல் பாடசாலையில் இடிபாடு ஏற்ற அனுப்பியது என வினவியுள்ளார். அதற்கு சாரதி தவிசாளரே அனுப்பியதாக கூறியுள்ளார். அங்கு வந்த பாடசாலை அதிபர் தான் தவிசாளருடன் கதைத்தே அவ்வாகனத்தை பெற்றதாக கூறியுள்ளார். அன்று பிரதேசசபை அமர்வு இருந்தமையால் அங்கு குறித்த பிரதேசசபை உறுப்பினர் அவ்விடயத்தை வினவியுள்ளார். அதாவது பல பிரதேசங்களிலிருந்தும் சரியாக குப்பை அகற்றுவதில்லையென முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளன. அந்த நிலையில் உடுப்பிட்டி பகுதியில் குப்பை ஏற்ற வேண்டிய வாகனம் அங்கு செல்லாமல் பாடசாலையில் ஒப்பந்தக்காரர் அகற்ற வேண்டிய இடிபாடுகளை அகற்றி கொண்டு உள்ளது. இன்று குப்பை அகற்றாவிட்டால் அப்பிரதேசத்திற்கு அடுத்த வியாழக்கிழைமையே வாகனம் செல்லும். எனவே அதுவரை குப்பைகள் வீதிகளில் கிடந்து இழுபட்டு பாரிய சுகாதார சீர்கேடு ஏற்படும் என கூறியுள்ளார். அதற்கு தவிசாளர் குறித்த பாடசாலை முற்கூட்டியே பணம் செலுத்தியுள்ளமையாலேயே அனுப்பியதாக தெரிவித்துள்ளார். அதற்கு குறித்த உறுப்பினர் காலை 8.00 மணிக்கு அலுவலகம் திறக்கவில்லை முற்கூட்டியே செலுத்தியிருந்தால் அதன் பற்றுச்சீட்டு பிரதியை சபையில் காட்டுமாறு கோரியுள்ளார். குறித்த பற்றுச்சீட்டு புத்தகம் சபைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த 21.02.2019 இலேயே ரூபா 4,000/= செலுத்தப்பட்டுள்ளது. அதுவும் பாடசாலையிலிருந்து அதிபர் தொலைபேசியில் விசயத்தை தவிசாளருக்கு சொன்னவுடன் அலுவலகம் திறந்தவுடன் தவிசாளர் தனது பணத்தையே செலுத்தியுள்ளார். இவ்வாறு தவிசாளரின் திருகுதாளங்கள் தொடர்ந்தவண்ணமேயுள்ளன என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.