1000 ரூபா என்னாச்சி...? 50 ரூபா கிடைச்சாச்சி....!

1000 ரூபா என்னாச்சி...? 
50 ரூபா கிடைச்சாச்சி....!

மஹிந்த அமரவீர, திகாம்பரத்துக்கிடையில் சபையில் வாக்குவாதம்


பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் விடுக்கப்பட்டிருந்த சவால் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மஹிந்த அமரவீர சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்த அமரவீர,
'' தமக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தொகை வழங்கப்படாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுவோம் என முற்போக்கு கூட்டணி அறிவிப்பு விடுத்திருந்தது.
தற்போது அப்பிரச்சினை தீர்ந்துவிட்டதா? அரசிலிருந்து வெளியேறீவிட்டீர்களா'' என அமைச்சர் திகாம்பரத்திடம் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.