றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார்-நானாட்டான் பிரதேசச் செயல பிரிவுகளில் உள்ள 33 அமைப்புக்களுக்கு பொருட்கள் கையளிப்பு

நானாட்டான் பிரதேச கிராம மட்டத்தில் உள்ள 33 அமைப்புக்களுக்கு சுமார் 10 இலச்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் இன்று வெள்ளிக்கிழமை (29) மாலை நானாட்டான் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேசச் செயலாளரின் பிரதி நிதியாக பிரதேச செயலக கணக்காளர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

வர்த்தக கைதொழில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த தளபாடப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முன்னால் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம விரந்தினராக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இதன் போது மீள் குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர்  ரஹ்மான், மாந்தை உப்பு கூட்டுத்தாபன பணிப்பாளர் றாஜன் மார், பிரதேச சபை உறுப்பினர்களான, மரியதாசன் ஞானராஜ் சோசை, சந்திரிக்கா, ஜீ.எம். சீலன், ஜென்சி, மற்றும் மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டு பொருட்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.