போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி ஜனாதிபதி தலைமையில்….
அதிவண. மெல்கம் கார்டினெல் ரஞ்சித் அருட்தந்தையின் வழிகாட்டலின் கீழ் அனைத்து மதத் தலைவர்களினதும் பங்குபற்றலில் (31) மோதரை, விட்ஸ்வைக் பூங்காவில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக இன்று முற்பகல் இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையை தொடர்ந்து மேல் மாகாண கத்தோலிக்க திருச்சபையிலிருந்து எதிர்ப்பு பதாதைகளை ஏந்தி அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. அதன்பின்னர் இன்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார், கிரேன்பாஸ் புனித ஜோசப், வத்தளை புனித மரியா ஆகிய திருச்சபைகளிலிருந்து வருகைதந்த எதிர்ப்பு ஊர்வலங்கள் மோதரை விட்ஸ்வைக் பூங்காவில் ஒன்றுதிரண்டதுடன், அங்கு சிறப்பு தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்றும் இடம்பெற்றது.
அதிவண. மெல்கம் கார்டினெல் ரஞ்சித் அருட்தந்தையால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
சங்கைக்குரிய கம்புறுகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் கத்தோலிக்க அருட்தந்தைகளும் ஏனைய சமய தலைவர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




Post a Comment