தாக்குதல் பழியை ஒரு சமூகம் அல்லது இனத்தின் மீது சுமத்தாதீர் – சபையில் மஹிந்த

தொடர் தாக்குதல் சம்பவங்களுக்கு அதிகாரி யாரோ ஒருவரை பலிக்கடாவாக்க அரசு முயல்வதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச , இந்த சம்பவங்களின் பழியை ஒரு சமூகம் அல்லது ஒரு இனத்தின் மீது சுமத்த எவரும் முயலக் கூடாதென தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ,

பாதுகாப்பு படைகளின் புலனாய்வுத்துறையினரை வேட்டையாடிய அரசு இன்று அதன் பலன்களை அனுபவிக்கிறது. நான் பாதுகாப்பு மிக்க நாடு ஒன்றை ஒப்படைத்தேன்.ஆனால் இன்று என்ன நடந்துள்ளது? புலனாய்வுத்துறை முடக்கப்பட்டுள்ளதால் தாக்குதல்களை இலகுவில் நடத்தக் கூடிய நிலை வந்துள்ளது. அரசு இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.எனது பாதுகாப்பு தரப்பினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல்கள் முன்னர் கிடைத்தாலும் அவர்கள் என்னிடம் சொல்லவில்லை.கூறியிருந்தால் நானாவது சொல்லியிருப்பேன்.நாட்டின் பாதுகாப்பு மிகவும் பலவீனமாவுள்ளது .
என்றார் மஹிந்த

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.