மாகாண சபைத் தேர்தல் சட்டம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நடைமுறையிலுள்ள சட்டம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பினை எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை எகொட உயன பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே மஹிந்த தேசப்பிரிய இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அதுகுறித்து நீதிமன்றத்தின் வழிக்காட்டல் தேவைப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment