பட்டதாரிகள் போராட்டம்!!
வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்காமை , 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமை“ ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“30 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம் இருந்தும் பட்டதாரிகளுக்கு நியமனம் எங்கே”,பட்ட படிப்புக்கு வேலை இல்லை எனில் பல்கலைக் கழகத்தை இழுத்து மூடு ,தொழிலுரிமை கிடையதாம் இதுவா நல்லாட்சி ” போன்ற வாசங்கங்களை ஏந்தியவாறு பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Post a Comment