மன்னாரின் உதவி காவல்துறை அத்தியகட்சகர் கைது!!!
மன்னாரின் உதவி காவல்துறை அத்தியகட்சகர் உபுல் அலவத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
பிலியந்தலைப் பகுதியின் காவல்துறை பொறுப்பதிகாரியாக இருந்த சந்தரப்பத்தில் கடந்த சந்தேகநபரொருவரை கடத்தி காணாமலாக்கிய சந்தேகத்தின் பேரில் உதவி காவல்துறை அத்தியகட்சகர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது,
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்ள அவர் அழைக்ப்பட்ட நிலையிலேயே விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 பீங்கான் கூட்டுத்தபனத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஒருவரின் வீட்டில் பணியாற்றிய ஒருவரை பிலியந்தலை காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் அவரை கடத்தி சென்று காணாமலாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
Post a Comment