பெரியமடு கிராமத்திற்கு வாழ்வாதார உதவிகள். கெளரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைப்பு.
இன்று மன்னார் பெரியமடு கிழக்கு, மேற்கு, மற்றும் காயநகர் பிரிவிலுள்ள விவசாயிகளுக்கு சுமார் ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஜனாப். எம்.எச்.தெளபீக், பெரியமடு வட்டார வேட்ப்பாளர் ஜனாப்.சமீம்,ஜனாப்.ஆப்தீன் மன்னார் மாவட்ட ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளர் திரு. குரூஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஜனாப்.தர்ஸீன் மற்றும் ஆதரவாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment