வடக்கு பாடசாலைகள் திங்கள் ஆரம்பம் – ஆளுநர் தெரிவிப்பு!
வடமாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்புத் தேவை எனக் கோரினால் அதனை வழங்கத் தாயார் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் 339 தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றிலும் 1000 பேர் படிக்கின்றனர். அவற்றில் எந்தொரு பாதுகாப்பு தன்மைகள் கூட இல்லாமல் இருக்கின்றது.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நகரபகுதியில் 84 தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன. ஏனைய பகுதியில் 290 தனியார் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.
இதில் எந்தொரு கல்வி நிலையத்தின் இயக்குனரும் பதிவு செய்ய முன்வரவில்லை அவர்கள் முன்வரவேண்டும். அப்போது தான் அவ்வாறான கல்வி நிலையங்களுக்குப் பாதுகாப்பினை வழங்கமுடியும். பொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஊடாக கல்வி நிலையத்திற்காக பாதுகாப்பினை கொடுக்கமுடியும். அதுவும் காலத்தின் தேவையாக இருக்கின்றது.
வடமாகாணத்தின் எதிர்வரும் 06 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.பாடசாலை சமூகம் இராணுவமயமற்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியதால், பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் சாரணர்களை உள்ளடக்கிய சிவில் விழிப்புக் குழுக்கள் விழிப்புடன் செயற்படும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக எந்தவொரு ஆசிரியரும் தமக்கு மேலதிக பாதுகாப்பு வேண்டும் எனக் கோரினால் அதனை கருத்தில் எடுத்து பாதுகாப்பு வழங்கத் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment