தனிப்பட்ட கட்சி அரசியலால் இனப்பிரச்சினை தீர்வை இழுத்தடிக்கக் கூடாது
தேசிய பொங்கல் விழாவில் சம்பந்தன்
தனிப்பட்ட கட்சி அரசியல் போட்டிகளால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியை நீடிக்கக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.அதேநேரம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய பொங்கல் விழா நேற்று இரவு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில நடைபெற்றது.
இதில் அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் உரையாற்றுகையில்,
யுத்தத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்ற உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு உதவியது. அதனாலேயே யுத்தமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.ஆனால், யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், தமிழர் பிரச்சினைக்கு இன்னும் தீர்வுகாணப்படவும் இல்லை. சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவுமில்லை.
இந்த நாட்டில் புரையோடிப்போய் இருக்கும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டேயாக வேண்டும். அரசியல் தீர்வு என்பது மிகவும் அத்தியாவசியமாகும்.

Post a Comment