குழு மோதல் – பருத்தித்துறையில் இளைஞன் அடித்துக் கொலை!

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில்   22 வயது இளைஞன் கோடாரியினால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை சம்பவத்தினால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
யாழ்ப்பாணம் பருத்ததித்துறை கற்கோவளம் பகுதியில் நேற்று  இரவு (13)  இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, கோடாரியால் இளைஞனை அடித்துக்கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வாசுதேவன் அமல்கரன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். இளைஞரின் சடலம் பருத்தித்துறை வைத்தியசலையில் வைக்கப்பட்டுள்ளது.
குழு மோதல் மற்றும் இளைஞரின் கொலை தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.