மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆய்விற்கான விலைமனு கோரல் செயற்பாடுகள் ஆரம்பம்!
மன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகெண்ணெய் தொடர்பான ஆய்வுகளுக்கான விலைமனு கோரல்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 6 ஆம் திகதி முதல் விலைமனு கோரல் நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பமாகியுள்ளதுடன், மே மாதம் 7 ஆம் திகதியுடன் அந்த நடவடிக்கைகள் நிறைவுபெறவுள்ளன.
மன்னார் வளைகுடாவில் மசகெண்ணெய் வளம் அடையாளம் காணப்பட்டுள்ள M-2 என்ற பகுதியில் "டொராடோ" மற்றும் "பரகியூடா" ஆகிய இரண்டு கிணறுகளை மேலும் விஸ்தரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டு கிணறுகளிலும் இரண்டு ட்ரில்லியன் கியூபிக் அடிகள் வரையான இயற்கை வாயு மற்றும் பத்து மிலலியன் பீப்பாய் வேறு வாயுக்கள் அடங்கியிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மன்னார் வளைகுடாவிலுள்ள எண்ணெய்க் கிணறுகளின் ஆய்வுகளுக்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட் விலைமனு கோரலுக்கு, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 12 சர்வதெச பெற்றோலிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டியிருந்தன.
இலங்கை அரசாங்கமும், பிரான்ஸும் கூட்டாக மன்னார் வளைகுடாவின் கிழக்கு கரையோரத்தில் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment