நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயங்களை ஆதரிப்பதுடன் பலமான எதிர்கட்சியாவும் நாங்கள் இருப்போம்.. -மஹிந்த ராஜபக்ச-
கடந்த நான்கு வருட காலப்பகுதிக்கு பின்னர் இலங்கையின் அனைத்து துயரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்கட்சியை பெற்றுக்கொண்டுள்ளது.இன்று காலை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியதாவது
நாட்டின் தற்போதைய மிக முக்கியமான பிரச்சனைகளாக காணப்படும் விவசாயத்துறை மற்றும் சரிவடைந்து செல்லும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியுள்ளோம் அத்துடன் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் விழிப்புடன் உள்ளோம்..
அரசாங்கத்தின் செயல்பாடுகளை விழிப்புடன் கண்காணிப்பதுடன் அதன் செயற்பாடுகளை ஆக்கப்பூர்வமான முறையில் விமர்சிப்போம். இறுதியாக, எதிர்கட்சி என்ற வகையில் முறையாக செயல்படவுள்ளவரை இந்த நாடு பெற்றுள்ளது

Post a Comment