செய்திகளை திரிவுபடுத்தும் ஊடகங்கள் – முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா காட்டம்

மாவனெல்லை சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் சில சகோதரமொழி ஊடகங்கள் தொடர்ந்தும் செய்திகளை திரிவுபடுத்தி வெளியிட்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று மாவனெல்லையில் கைப்பற்றப்பட்ட ஆயுதம் தொடர்பிலும் அச்சு மற்றும் இணைய ஊடகங்கள் சில, யுத்தகாலத்தில் மீட்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகச் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இது தொடர்பில் குறித்த ஊடக நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்த முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா வின் பிரதிநிதிகள், ஒரு இனத்தை இலக்கு வைத்துத் தொடர்ந்தும் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை திரிவுபடுத்தி வெளியிட்டு, பெரும்பான்மை மக்கள் மத்தில், சிறுபான்மை மக்கள் தொடர்பில் பிழையான எண்ணங்களை விதைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று குறித்த ஒரு இணைய ஊடகம் வெளியிட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புபடாத புகைப்படங்களை நீக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் இவ்வாறு செயல்களில் சகோதரமொழி பிரதான ஊடகங்கள் செயற்படுமாயின் இனங்களுக்கு இடையிலான நல்லுறவு பாதிக்கப்படும் என தெரிவித்துள்ள முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா, செய்திகளை திரிவுபடுத்தாமல் உண்மையான தகவல்களை மாத்திரம் மக்கள் மத்தில் கொண்டுசெல்ல ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.