சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி காணிகளை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை!!!
வடக்கில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் யுத்தத்தின் பின்னர் படையினர் வசம் இருந்துவரும் சிலாபத்துறை கடற்படை முகாமை அகற்றி தருமாறு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்....
முசலிப்பிரதேசத்தின் 32 ஊர்களின் தலைநகராக இருப்பது சிலாபத்துறை நகராகவும். யுத்தத்தின் பின்னர் குடியேறி வரும் மக்களின் அன்றாட வாழ்வாதார விடயங்களுக்கும் முக்கிய கட்டிடங்கள் அமைப்பதற்கும் இந்த கடட்படை முகாமின் அமைவிடம் மிகவும் சிரமாக உள்ளது..
கடந்த காலங்களில் பாராளுமன்றில் இந்த கடற்படை முகாமை அகற்றுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பேசியிருப்பதையும் சுட்டிக்காட்டுவதுடன். இந்த கடற்படை முகம் அகற்றுதல் தொடர்பாக கவனயீர்ப்பு போராட்டம், போஸ்காட் போராட்டம் என பல நாட்களாக மக்கள் நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது...
இன்றைய காலகட்டத்தில் வடக்கில் அதிகமான படைமுகாம்கள் அமைத்திருந்த காணிகள் மக்கள் பாவனைக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த முகாமை அகற்றி எங்கள் காணியை பெற்றுத்தருமாறு பிரதேச மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்....

Post a Comment