முசலிப்பிரதேசபையின் தவிசாளரின் கவனத்திற்கு....
இந்த எழுவன்குள பாதையின் அரைவாசி தூரத்தினை வண்ணாத்திவில்லு பிரதேசபை புனரமைப்பு செய்திருக்கின்ற போதும் மிகுதியாக உள்ள பாதையினை முசலிப்பிரதேசபை செப்பனிடாமல் அந்த விடயம் தொடர்பாக கவனம் எடுக்காமல் இருப்பதாகவும் இந்த பாதையினுடாக பயணிக்கும் மக்கள் தங்களின் கவலையினை வெளியிட்டார்கள்....
கடந்த காலத்தில் முசலிப்பிரதேசபையின் தவிசாளராக இருந்தவர் இந்த பாதையினை துப்பரவு செய்து செப்பனிட்டு பாதையினை பயன்பட்டு உகந்ததாக பாதுகாத்து வந்ததாகவும் இந்த பாதை விடயத்தில் அதிக அக்கறை காட்டி வந்துள்ள நிலையில் ஒருவருடகாலமாக தவிசாளராக இருக்கும் நீங்கள் எத்தனை முறைகள் இந்த பாதை புனரமைப்பு விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளீர்களா என்ற கேள்வி எழுகிறது...
தவிசாளர் அவர்களே மழைகாலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் இந்த பாதையினை பயன்படுத்துவது எமது பிரதேச மக்கள் இன்று இந்த பாதையினுடாக பஸ்களில் வருகின்ற மக்கள் இடைஇடையே இரக்கப்பட்டு நடை பயணத்திலே ஊர்களுக்கு வரவேண்டிய நிலையில் கஷ்டத்தை அனுபவிக்கினறனர்.
தவிசாளர் அவர்களே கவனம் எடுங்கள் பாதையை துப்பரவு செய்து குன்றும் குழியுமாக இருக்கும் இந்த பாதையை புனரப்பு வேலையை விரைவுபடுத்துங்கள் எம்மக்களின்பயண கஷ்டத்திற்கு விடைகொடுங்கள்...

Post a Comment