சிலாபத்துறையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுமா???

முத்துச் சிலாவத்துறை என அழைக்கப்படும் சிலாவத்துறை புராதன காலத்தில் முத்துக்குளித்தலில் கொடிகட்டிப் பறந்த சரித்திரம் உண்டு.எகிப்திய ராணி கிளியோபட்ரா அணிந்த முத்தின் தாயகம் சிலாவத்துறையேயாகும்.முத்துக்குளித்தலை மேற்பார்வை செய்யவும்,அதற்கான வரி அறவிடவுமே “டொரிக்” (அல்லிராணி கோட்டை) ஐரோப்பியரால் அமைக்கப்பட்டது.இன்றும் அது அழிவு நிலையில் அரிப்பு வீதியில் காட்சி தருகிறது,

மீன்பிடித்தளத்தைக் கொண்ட சிலாவத்துறையில் ஒரு மீன்பிடித் துறைமுகத்தை அமைக்கும் போது பின்வரும் நன்மைகளை அடையலாம்.

1.மீனவர்களின் பொருளாதாரம் உயரும்
2.நாட்டின் மீன்உணவுத் தேவை நிறைவேறும்
3.சிலாவத்துறை நகர் விருத்தியடையும்.
4.தொழில் வாய்ப்பு அதிகரிக்கும்.
5.மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நிறைவுறும்.
6.புத்தளம்,மன்னார் போன்ற பிரதேசங்களுக்கு கடல்வழிப் போக்குவரத்துச் செய்யலாம்,

7.பிரதேசசபைக்கான வருமானம் அதிகரிக்கும்.
8.மீன்பதனிடும் கைத்தொழில் அதிகரிக்கும்.
9.கைத்தொழில் பேட்டை உருவாகலாம்.
10.சமுத்திரவியல் பல்கலைக்கழக பீடம் உருவாகலாம்.
11.மீன்பிடித்தொழில் எழுச்சி ஏற்படும்.


ஏறத்தாழ 30 கிராமங்களைக் கொண்ட முசலித்தேச மக்கள் தொழில் இன்றி பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்,
கடந்த வரவுசெலவுத்திட்ட முன்மொழிவிலே சிலாவத்துறையில் ஒரு மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் எவ்வித முன் நகர்வும் இடம்பெறவில்லை,


இன்று அரசியல் சூறாவளியின் பின்பு அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களுக்கு துறைமுகங்கள்,கப்பல்த்துறை பிரதியமைச்சு வழங்கப்பட்டுள்ளது,இவருக்கு முசலிக் களநிலவரம் நன்கு தெரியும்.இவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலின் பிரகாரம் சிலாவத்துறை மீன்பிடித்துறைமுக நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்,

-k.c.m.அஸ்ஹர் (முசலியூர்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.