வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் மீண்டும் அணியில் இணைப்பு.
வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் அமீர், பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டிக்காக அவர் இணைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி, தற்போது தென்னாபிரிக்காவிற்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான 16 பேரை கொண்ட பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட் அணியை வழிநடத்தவுள்ளார்.
இதனிடையே, வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் அமீர் மற்றும் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான மொஹம்மட் ரிஸ்வான் ஆகியோரும் பாகிஸ்தான் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உள்ளடக்கப்பட்டிருந்த அசீப் அலி மற்றும் ஜூனைட் கான் ஆகியோர், இம்முறை தென்னாபிரிக்காவுக்கான ஒருநாள் போட்டியில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழந்தாளில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஹாரிஸ் சொஹய்ல், இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.


Post a Comment